தமிழக அரசுக்கு எதிரான அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 17ம் தேதிக்கு தள்ளி வைப்பு
சென்னை :
திமுக அரசுக்கு எதிரான அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று அறிவி்த்துள்ளனர்.
அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 11 ம்தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 17-12-2021 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது,
முன்னதாக, டிசம்பர் 9 ம்தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 11 ம்தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் என நேற்று (8-12-2021) அதிமுக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments