Breaking News

கர்நாடக மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சரிவு

பெங்களூரு டிச.31-

கர்நாடக மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா பெரும் சரிவைச் சந்தித்தது எதிர்க்கட்சியான காங்கிரஸ் நிலையை வெளிப்படுத்தி உள்ளது.



மாநகராட்சிகளில் 67 இடங்களை  பாஜக கைப்பற்றியது மாநகராட்சி வார்டுகளில் காங்கிரஸ்  61 இடங்களை கைப்பற்றியது.  மதச்சார்பற்ற ஜனதா தளம் 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. மாநகராட்சி வார்டுகளில் சுயேட்சைகள் 27 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

பேரூராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 176 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 201 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜனதா தளம் 12 இடங்களையும் சுயேட்சைகள் 43 இடங்களையும் பிடித்துள்ளனர்.

பஞ்சாயத்துத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 194 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி 236 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 12 இடங்களிலும் சுயேட்சைகள்  நூத்தி முப்பத்தி ஐந்து இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

No comments

Thank you for your comments