மீண்டும் வேலூரில் நில அதிர்வு - மக்கள் அச்சம்
வேலூர்:
வேலூரில் ஏற்பட்ட நில அதிர்வினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் இருந்து 50 கி.மீ மேற்கு வடமேற்கு பகுதியில் சில இடங்களில் இன்று பிற்பகல் 3.14 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நில அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். இருப்பினும் பாதிப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments