Breaking News

மாவட்ட நீதிமன்றத்தில் பயங்கர குண்டுவெடிப்பு - 2 பேர் பலி... பலர் படுகாயம்

லூதியானா, டிச. 23-

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் இன்று பகல் 12: 25 மணிக்கு குண்டு வெடித்தது. 

குண்டு வெடிப்பு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது பலர் காயமடைந்தனர்.  காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

லூதியானா மாவட்ட நீதிமன்றத்தின் பழைய கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கழிவறை ஒன்றில் குண்டு வெடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குண்டு வெடித்ததால் மேற்கூரை நொறுங்கி கீழே விழுந்ததாகவும் கழிவறையின் சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

வழக்கு விசாரணை நேரம் என்பதால் நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான பேர் குழுமியிருந்தனர் அவர்களில் பலர் காயமடைந்தனர்.

வழக்கறிஞர்கள் அறை புதிய கட்டடத்தில் அமைந்துள்ளது அதனால் வழக்கறிஞர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குண்டு வெடிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த செய்தியை போலீசார் இதுவரை உறுதி செய்யவில்லை.

No comments

Thank you for your comments