பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு - முதலமைச்சர் நேரில் அஞ்சலி
சென்னை
பிரபல பின்னணி பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் (73) நேற்று மாலை சென்னையில் காலமானார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று மாணிக்க விநாயகம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக்குறைவால் காலமான பின்னணி பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளார்.
மாணிக்க விநாயகம் குறிப்பு
கண்ணுக்குள்ள கெளுத்தி, வச்சிருக்க சிறுக்கி இப்போ இப்போ என்ற மறக்க முடியாத பாடலை பாடி மாணிக்க விநாயகம் பிரபலமானார்.
இதுவரைக்கும் 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள மாணிக்க விநாயகம், திரைப்படங்களில் குணசித்திர நடிகராகவும் விளங்கினார். தில், திருடா திருடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் வித்தியாசாகர் தான் மாணிக்க விநாயகத்ததின் திரையுலக நுழைவாயிலாக விளங்கினார்.
"விடை கொடு எங்கள் நாடே" பாடல் மூலம் என்றென்றும் நினைவுகூறப்படுவார் பாடகர் மாணிக்க விநாயகம்.
No comments
Thank you for your comments