Breaking News

குப்பைக் கழிவுகளை வெளியில் கொட்டினால் அபராதம்

கோயம்புத்தூர்:

மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கருப்பு கலர் பாலித்தீன் கவர்களை உபயோகிக்காமல், மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக பெட்டிகளில் சேகரித்து மாநகராட்சி வண்டிகளில் ஒப்படைக்க வேண்டும். குப்பைக் கழிவுகளை குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியிலோ கொட்டுவதை சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவிக்கையில், 

"கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுதோறும் சேகாரமாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தினமும் சேகாரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு 90. டன்னாக இருந்த மக்கும் குப்பையின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது தினமும் சுமார் 175 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் தனியாக பெறப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. 

குப்பைகளை வீடுதோறும் தரம் பிரித்து வாங்கும் பொழுது (மக்கும் மற்றும் மக்காத குப்பை) இக்குப்பைகளை எளிதாக கொண்டு சென்று செயலாக்கம் செய்ய சிரமம் இல்லாமல் இருக்கும். ஆகவே, வீட்டில் சேகாரமாகும் குப்பையில் மக்கும் மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரித்து கொடுக்க வேண்டப்படுகிறது. 

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கருப்பு கலர் பாலித்தீன் கவர்களை உபயோகிக்காமல், மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக பெட்டிகளில் சேகரித்து மாநகராட்சி வண்டிகளில் ஒப்படைக்க வேண்டும். குப்பைக் கழிவுகளை குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியிலோ கொட்டுவதை சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். 

மேலும், மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியாக வழங்கப்பட வேண்டும் என கோயம்புத்தூர் மாநகராட்சி  ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா  தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments