Breaking News

விருது பெறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, டிச.31-

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் அம்பை மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் கவிஞர் மு. முருகேஷ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு. தனது 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள்!

தமிழில், பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும்.

கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்! சிறார்களுக்கான எளிய - இனிய படைப்புகள் தமிழில் செழித்திட இந்த விருது ஊக்கம் அளிக்கட்டும்.

இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.




No comments

Thank you for your comments