மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!
நாமக்கல், டிச.20-
நாமக்கல்லில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபர்களது வாரிசுதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பயனாளிகளுக்கான நிவாரண உதவித்தொகை வழங்கும் பணிகள் தொய்வில்லாமல் நடக்க அறிவுறுத்தினார் நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயாசிங்.
No comments
Thank you for your comments