Breaking News

மாயமான ஊர் காவல் படை வீரர் சடலமாக மீட்பு

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் ஊர் காவல் படை வீரர்வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பாலாற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மாயமானார்.  

தீயணைப்புத் துறையினரின் 2 நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு இன்று சடலமாக மீட்டனர்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ஜோதி, இவரது மகன் தரணிகுமார் வயது 31, இவர் ஊர்க்காவல் படை வீரராக காஞ்சிபுரத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் ஓடும் பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

பாலாற்று வெள்ளப்பெருக்கில் குளித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென தரணி குமார் நீரில் மூழ்கி மாயமாகிவிட்டார்.

இதுகுறித்து அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், காவல்துறைக்கும், தகவல் அளித்ததன் பேரில் கடந்த இரண்டு தினங்களாக காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பாலாற்று வெள்ளப்பெருக்கில் படகில் சென்று நீரில் மூழ்கிய தரணிகுமாரை தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த இரு தினங்களாக தேடி வந்த நிலையில் இன்று தரணிகுமாரை பழையசீவரம் பாலாற்று தடுப்பணை அருகே தீயணைப்பு துறையினர் சடலமாக கண்டெடுத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாலவாக்கம் போலீசார் தரணி குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமுக்கூடல் பாலாற்றில் குளிக்கச் சென்ற ஊர் காவல் படை வீரர் தரணிகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் ஓரிக்கை, பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments