தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
சென்னை:
சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பிறகு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல் முறையாக நடைபெற இருக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வரும் டிசம்பர் 6-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படும். எனவே, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பிறகு தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் 6/12/2021 காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.நகர்புற உள்ளாட்சி தேர்தல்,கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் pic.twitter.com/GufvID6E7m
— Vijayakant (@iVijayakant) December 2, 2021
No comments
Thank you for your comments