Breaking News

உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பிறந்தநாள் விழா... பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பிறந்தநாள் விழாவை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் விருத்தாசலம் ஜங்ஷன் கிருஷ்ணசாமி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, பேனா வழங்கும் விழா மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட செயலாளர் ராஜ்கமல், மாவட்ட துணை செயலாளர் வடிவேல் முருகன், மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, கம்மாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் சாமிநாதன், விருத்தாசலம் நகர நிர்வாகிகள் பாலாஜி, மணி, பபுலு, விமல், குமார், ஒன்றிய நிர்வாகி குமார், மகேஷ், பிரவீன்குமார் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் லதா, உமாதேவி, ரவி, ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments