Breaking News

தொடரும் பிடிஓக்களின் முறைகேடுகள்! - நடவடிக்கை பாயுமா?

வேலூர், டிச.7-

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது ஊர் அறிந்த ரகசியம். இதுதொடர்பாக பிடிஓக்கள் உட்பட பலர் பேர் மீது வேலூர் விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனாலும் இன்றளவும் மாற்றம் இல்லாமல் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு திட்டம், 100 நாள் வேலைத்திட்டம் என எந்த பட்டியலையும் விட்டு விடாமல் அனைத்திலும் ஊழல் பெருச்சாளிகளாக பிடிஓக்கள் வலம் வருகின்றனர் என்று குமுறுகின்றனர் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்... 

தமிழக ஊரக வளர்ச்சித்துறையில். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் அதிகாரிகள் தொடங்கி ஊராட்சி செயலர்கள் வரை கோடிக்கணக்கில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது அவ்வப்போது உரிய ஆதாரங்களுடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. 

அந்த வகையில் கடந்த வேலூர் மாவட்டம் பல்வேறு ஊராட்சிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஊரக உள்கட்டமைப்பு திட்டங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தொடர் விசாரணையில்  கையாடல் செய்திருப்பது உறுதியானது. இதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களும், தகுதியில்லாதவர்களும் கூட இணைக்கப்பட்டு பெரிய அளவில் மோசடி நடந்தது அம்பலமானது... பிடிஓக்கள் உட்பட 18 பேர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையிலும், பிடிஓக்கள் திருந்துவதாக இல்லை... பிடிஓ, ஏபிடிஓக்கள் என ஒன்று சேர்ந்து கூட்டு கொள்ளை அடிப்பதில் ஒன்றுமை பணியாற்றுகிறார்கள்.... இன்றும் ஒன்றியங்களில் ஊழல் புரையோடி உள்ளது என்பதுதான் நிதர்சனம்... 



தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் ஊரக உள்கட்டமைப்பு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு திட்டம், 100 நாள் வேலைத்திட்டம், ஊராட்சிகளில் தெருவிளக்குகள், குடிநீர் வினியோகத்துக்கான உபகரணங்கள் கொள்முதல், போர்வெல்கள் அமைத்தல், கொரோனா பிளீச்சிங் பவுடர், கிருமினி நாசினி ஒன்றையும் விட்டுவைக்கமால் கொள்ளை அடித்துள்ளனர் பிடிஓக்கள் என வேலூர் மாவட்ட மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.  

குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில் ஆட்கள் பொய்யாக கணக்கு காண்பித்து தினம் தினம் கொள்ளை அடித்து வருகின்றனர்... ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக  வேலைவாய்ப்பிற்காகதான் 100 வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது.. ஆனால் பிடிஓக்களின் ஒத்துழைப்போடு கொள்ளையடிக்கப்படுகிறது....

இதுபோன்று பல்வேறு பணிகளில் பிடிஓக்களில் முறைகேடுகள் தினம் அரங்கேறிவருவதாக பொது மக்கள் குறை கூறுகின்றனர்.. மக்களுக்கு சேரவேண்டிய திட்டங்களை முழுமைய சேராமல் முதலைபோன்று முழுங்கிவிடுகின்றனர்.

ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றிய அலுவலர்கள், மத்திய அரசின் திட்டங்களில் இறந்தவர்கள், முதியவர்கள், பினாமி பெயர்களில் கூட்டாக பல கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளனர். இதற்காக போலி பெயர்களில் வங்கிக் கணக்கையும் ஆரம்பித்து, பணம் வந்ததும் கணக்கை கேன்சல் செய்து விட்டனர். இன்றளவும் பிடிஓக்களின் முறைகேடுகள்ள முற்றுப்பெறவில்லை... 

எனவே திட்ட பயனாளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தினால் பலர் சிக்குவர் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

எனவே இதுகுறித்து பிடிஓக்கள் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் இணை இயக்குநர் /திட்ட அலுவலர், ஊரகவளர்ச்சி முகமை அதிகாரி திருமதி.க.ஆர்த்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன் விரிவான விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்திரவிடவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

No comments

Thank you for your comments