சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனை கட்டணங்கள் அதிரடியாக குறைப்பு
சென்னை:
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இன்று நள்ளிரவு 00.01 (08.12.2021) மணியிலிருந்து ஒமிக்ரான் பரிசோதனை கட்டணங்கள் அதிரடியாக குறைப்பு. தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் பேரில் ஏா்போா்ட் அத்தாரிட்டி இந்த கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.
இதுவரை ரூ.3,400 ஆக இருந்த Rapid PCR பரிசோதணைக்கட்டணம் ரூ.500 குறைக்கப்பட்டு,ரூ.2,900 ஆக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் RT-PCR பரிசோதனை கட்டணம் இதுவரை ரூ.700 ஆக இருந்தது.அது ரூ.100 குறைக்கப்பட்டு,ரூ.600 ஆக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்றிலிருந்து இந்த பரிசோதனைக்காகன நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டணங்களும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுளௌளது.
No comments
Thank you for your comments