இன்று போதைப்பொருள் மற்றும் எச்.ஐ.வி., பாதிப்பு குறித்து விழிப்புணர்வு - மாவட்ட ஆட்சியர் திவ்தர்ஷினி
தருமபுரி
மக்களிடம் எச். ஐ. வி / எய்ட்ஸ் பதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தேறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு தருமபுரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அழகின் சார்பில் இன்று (01.12.2021) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி துவக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து காலை 10.15 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட கலால் துறையின் சார்பில் போலி மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நிருபர் எம் எஸ் பி மணிபாரதி
No comments
Thank you for your comments