Breaking News

நலவாரியம் அரசாணை வெளியீடு- முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நே.ஜ.யூ.தலைவர் டாக்டர் குமார்

சென்னை :

பத்திரிகையாளர்கள் நலன் கருதி பத்திரிகையாளர் நல வாரியத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாண்புமிகு முதலமைச்சருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் அவர்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். 

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பத்திரிகையாளர், மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கை தங்களுக்கான வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இந்த நிலையில் கடந்த 2021-2022 - ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில்

"தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதனை செயல்படுத்தும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

மேலும், நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவிக் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் என்பது போதுமானதாக இல்லை என்பது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தெரியும்.. எனவே... மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ரூ.15 ஆயிரமாக தாயுள்ளத்துடன் உயர்த்தி தரவேண்டும்.... 

பத்திரிகையாளரை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு குடும்ப நலநிதியை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக தங்களை கேட்டுக்கொள்கின்றோம்...

இவ்வாறு   நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments