உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாளையொட்டி 700 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலவாக்கம் ஒன்றியம் சிறுப்பினாயூர் ஊராட்சியில் அடங்கிய திருவனந்தவார் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி மணி மற்றும் காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பெ. மணி அவர்களின் ஏற்பாட்டில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44வது பிறந்தநாள் நாள் விழாவையொட்டி 4 புதிய கல்வெட்டு அமைத்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கி மேலும் 700 குடும்பங்களுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.அப்துல்மாலிக், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார் ஆகியோர் நலத்திட்ட உதவி வழங்கும் போது கலந்துகொண்டனர்.





No comments
Thank you for your comments