45 மற்றும் 49 வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் 45 மற்றும் 49 வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அதிமுக மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
காஞ்சிபுரம் 45 மற்றும் 49 வது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் தலைமையில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட அபிரமி நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு சின்னையன்குளம் கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் உப்புத் தண்ணீராக உள்ளதால் அதை மாற்றி புதிதாக செவிலிமேடு பள்ளி காலனியில் உள்ள ஏதாவது ஒரு கிணற்றில் இணைப்பு வழங்கமாறும்,
ஈஸ்வரன் கோவில் பின் தெரு, காந்தி நகர் ,சத்யா நகர் டேங்க், இந்திரா நகர், அன்னை சத்யா நகர், பாரதிதாசன் நகர் ,உமா சங்கர் நகர், தும்பவனம் காலனி,கணேசன் நகர் அண்ணாமலை நகர், எம்.வி.எம்.பி. நகர், நடேசன் நகர், சி.வி.எம். அண்ணாமலை நகர், குணசேகரன் நகர், பெருந்தேவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20 மின் விசைப் பம்ப்பு அமைத்து தருமாறும்,
49வது வார்டுக்கு உட்பட்ட சதாவரம் பகுதியில் குணசேகரன் நகர் தெருவில் தெருக்குழாய் இணைப்பு இல்லாததால் 300 அடிவரை புதிய இரண்டு பைப் லைன் அமைத்து தரவேண்டும் எனவும் ஈஸ்வரன் கோயில் தெரு, இந்திரா நகர், காந்தி நகர், குணசேகரன் நகர், மகாவிஷ்ணு நகர் ,அபிராமி நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தெரு குழாய்கள் அமைத்து தர வேண்டும்.
49வது வார்டு குட்பட்ட ஈஸ்வரன் கோயில் பின் தெரு, லக்ஷ்மி ரத்னா நகர், மகாவிஷ்ணு நகர், காந்தி நகர், சின்னச்சாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 22 புதிய மின் கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு பொருத்தி தருமாறும்,
சதாவரம் காந்தி நகரில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு பணி முடிக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அக்கட்டடத்தை முழுமையாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும்,
சதாவரம் பகுதியில் தேனம்பாக்கம் ஏரி, ஓரிக்கை ஏரி ஆகிய 2 ஏரிகளில் கலங்களில் இருந்து அதிகமாக நீர் வெளியேறுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் இவ்விரண்டு நகர்களுக்கும் ஒரு சிறு பாலம் அமைத்து தர வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கழகச் செயலாளர்கள் , களக்காட்டூர் ராஜி, தருமன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் ,மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பேரூராட்சி கழக செயலாளர் ஜெய விஷ்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments