Breaking News

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 400 அரசு அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி

காட்பாடி:

காட்பாடி விஐடி சென்னா ரெட்டி ஹாலில் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும்  400 அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  பெ.குமாரவேல் பாண்டியன்  இன்று (23/12/2021)  துவக்கி வைத்தார்.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும்  அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சியில்  ஒருங்கிணைப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) ஏ.மணி  அவர்கள் வரவேற்புரையும், உதவி இயக்குநர்(ஓய்வு) எம்.குப்பன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை உரையில் பேசியதாவது...

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

கொரோனா நோய் தொற்று காரணமாக பவானிசாகர் அடிப்படை பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு கடந்த  2 ஆண்டுகளில் பயிற்சி நடத்தப்படாததன் காரணமாக தமிழகம் முழுவதும் மொத்தம் பயிற்சி எடுக்க வேண்டியவர்களின் அலுவலர்களின் எண்ணிக்கை 9000-த்தை கடந்தவிட்ட  நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்ட பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு தலைமைச் செயலர் மற்றும் பயிற்சித் துறைத்தலைவரின் ஆணைப்படி பவானிசாகர் அடிப்படை பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களில் வழங்கி பயிற்சிகளை முடிக்க அறிவித்துள்ளனர். 

அதன்படி,  தற்போது வேலூர் மாவட்டத்தில் பவானிசாகர் அடிப்படை பயிற்சி எடுக்க வேண்டிய 400 பயிற்சியாளர்களுக்கு இன்று முதல் பயிற்சி தொடங்கி 37 பணி வேலை நாட்கள் பயிற்சியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இந்த பயிற்சியினை சிறந்த முறையில் பயன்படுத்தி அரசு அலுவலர்கள் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  பெ.குமாரவேல் பாண்டியன் உரையாற்றினார்.


 

No comments

Thank you for your comments