Breaking News

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி கைது... ரூ.3,60,000 மதிப்புடைய நகை மீட்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக் காகாவல்நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம், சதாவரம் , குணசேகரன் நகர் அருகே விஜயலட்சுமி (31) க/பெ.சிவக்குமார், சின்னசாமி நகர், சதாவரம், காஞ்சிபுரம் என்பவர் 12.12.2021 அன்று மதியம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் வழிகேட்பது போல் கேட்டு விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலிச்சரடை பறித்துச் சென்றது சம்மந்தமாக காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் 12.12.2021 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இவ்வழக்கினை துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரியை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர் திரு.இராஜகோபால் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.முரளி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், ஆனந்தன் ( 36 ) த / பெ.ஆறுமுகம், எண்.30, பவள வண்ணார் தெரு, காஞ்சிபுரம் என்பவர் மேற்படி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்ததையடுத்து மேற்படி எதிரி ஆனந்தனை கைது செய்தும், களவுபோன தங்க தாலிச்சரடும் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். மேலும், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ( CCTV ) பொருத்துவதன் மூலமாக பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுக்க ஏதுவாக அமைவது மட்டுமல்லாமல் குற்றவாளிகளை பிடிக்கவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார்.

No comments

Thank you for your comments