எம்.ஜி.ஆர்-ன் 34-வது ஆண்டு நினைவு நாளையொட்டி எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
காஞ்சிபுரம்:
எம்.ஜி.ஆர்-ன் 34-வது ஆண்டு நினைவுநாளை யொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 34- வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது.
அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோம சுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் பின்னர் பொது மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதைதொடந்து பஸ் நிலையம் அருகே நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ்நிலையம், பூக்கடை சத்திரம், பெரியார் தூண், தேரடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி ஆரின் திரு உருவ படத்திற்கும், வாலாஜாபாத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.மேலும் பொது மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்,மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர் சத்யா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர முன்னனி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துக் கொண்டு எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
No comments
Thank you for your comments