Breaking News

வேலூர் மலபார் ஜூவல்லர்ஸ் சார்பில் ரூ 33 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்!

வேலூர் ,டிச. 29:.  ‌‌                                

வேலூர் மலபார் ஜுவல்லரி சார்பில் 38 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு ரூ .33 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது.  


                                                      

வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள சங்கமம் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ரூ.33 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை 38 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் வழங்கி வாழ்த்தினார். 

மலபார்  ஜூவல்லர்ஸ் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டும் அதாவது 460 பேர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.  

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவிகளில் 300 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு தலா ரூ. 6 ஆயிரமும், 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு தலா ரூ. 8000, பெற்றோர்களை இழந்த மாணவிகளுக்கு தலா ரூ. 10,000 என 460 பேர்களுக்கு முதல் தவணை தொகையாக இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 

460 மாணவிகள் இந்தக் கல்வி உதவித்தொகை மூலம் பயன் பெற்றுள்ளனர்.

தங்கள் கல்வி தடைபடாமல் மேல்நிலைக் கல்வி பயிலவும் இந்த கல்வி உதவித் தொகை இருந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் மாணவிகளுடன் அவர்களது பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள், மாணவிகளின் பெற்றோர் என திரளானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், வேலூர் தொகுதி எம்பி டி.எம். கதிர் ஆனந்த் மற்றும் மலபார் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் வேலூர் கிளை மேலாளர் அனீஸ் ரஹ்மான், மற்றொரு மேலாளர் முகமது அசூர், நித்தின், சையத் மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

No comments

Thank you for your comments