Breaking News

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி-2021

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி-2021 டிசம்பர் 18,19ம் தேதிகளில் நடைபெற்றது .

இதில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் ,இதில் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நெசவுத் துறை அமைச்சர் மஸ்தான், அபிலாஷ்-வேல்ஸ் குரூப்ஸ், அர்ஜுன்-தமிழ்நாடு ஒலிம்பிக் அசோஷியேஷன் மற்றும் ஹரிஷ்-ஒன்மேன் குரூப்ஸ் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.

இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த  ஒன்மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு 27 வீரர்கள் தங்கப்பதக்கமும் 17 வீரர்கள் வெள்ளிப் பதக்கமும் 15 வீரர்கள் வெண்கலப் பதக்கமும் வென்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்தனர்.


மேலும் இதில் பதக்கங்களை வென்ற வீரர்கள் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தகுதி பெற்று பூனேவில் நடைபெற உள்ள நேஷனல் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் கலந்துகொள்ள சென்றுள்ளனர்கள்.



No comments

Thank you for your comments