டிசம்பர்18ஆம் தேதி திமுக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (12-12-2021) அறிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டிசம்பர் 18ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5:30 மணியளவில் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பாராளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
No comments
Thank you for your comments