Breaking News

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம்

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

மருத்துவ கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற 988 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்.

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழா காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது .

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகடமியின் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில்  நடந்த பட்டமளிப்பு விழாவில் கோவை அவினாசிலிங்கம்  இல்ல அறிவியல் மற்றும் உயர் கல்விக் கூடத்தின் வேந்தர் டாக்டர் எஸ் பி தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவத் கல்வியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைவர் ஜெயந்தி, தன்னாட்சி பல்கலைக்கழகமாக விளங்கும் மீனாட்சி உயர்கல்வி ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் 15 ஆவது பட்டமளிப்பு விழாவில் 988 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 49 பேருக்கு முனைவர் பட்டமும், 66பேருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது என்றும், முதல்முறையாக கொரானா பெருந்தொற்று காலத்தில் சமூக சேவை ஆற்றிய ஒருவருக்கும்,  பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களுக்கும் அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு முதல் புதிதாக விருதுகள்  வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மீனாட்சி உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் 8 உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் மேலும் புதிதாக நான்கு உயர்கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும், வளர்ந்து வரும் மருத்துவ உலகில் தேவைக்கேற்ப நோயாளிகள் சிகிச்சையில் மேம்படுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவக் கல்வி பணியில் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பட்டமபளிப்பு விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் நீலகண்டன், பதிவாளர் கிருத்திகா மற்றும் பேராசிரியர்களும், பெற்றோர்களும், மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. Hearty congratulations.
    I wish this deemed university to scale more heights in the field of education and in inculcating values to all the students.

    ReplyDelete

Thank you for your comments