தமிழகத்தில் ரூ 1.5 கோடி குட்கா, ரூ 51.97 லட்சம் கஞ்சா பறிமுதல் .... டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
சென்னை:
தமிழகத்தில் ரூ 1.5 கோடி குட்கா, ரூ 51.97 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த 06.12.2021 முதல் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி விற்பனைகளை தமிழ்நாட்டில் முழுவதும் தடுக்கும் பொருட்டு தமிழகக் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தியதற்காக 239 வழக்குகள் பதியப்பட்டு 324 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 51.97 இலட்சம் மதிப்புள்ள 520 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் போதை மருந்து தடவப்பட்ட சாக்லெட் 33 கிலோ, சென்னை மற்றும் காட்பாடி வந்த இரயில்களில் 25 கிலோ, தேனி மாவட்டத்தில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட விரோத புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தியதற்காக 2940 வழக்குகளில் 2983 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1.64 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 3818 கிலோ, சேலம் மாவட்டத்தில் 1909 கிலோ, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1790 கிலோ, நாமக்கல் மாவட்டத்தில் 1597 கிலோ, ஈரோடு மாவட்டத்தில் 1255 கிலோ மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1045 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் தடைசெய்யப்பட்ட 130 லாட்டரி வழக்குகளில் 154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ 3.08/- இலட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தடைச் செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரிகளின் விற்பனையாளர், பதுக்கி வைப்போர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை தொடர்கிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை பற்றிய விவரங்களை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் 100, 112 மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களில் தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, டிஜிபி சைலேந்திர பாபு அலுவலகம் தெரிவித்துள்ளது
No comments
Thank you for your comments