திமுக சார்பில் 1முதல் 51 வார்டுகள் வரை திமுக ஆய்வுக் கூட்டம் நிறைவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக சார்பில் 1முதல் 51 வார்டுகள் வரை திமுக ஆய்வுக் கூட்டம் நிறைவு பெற்றது.
காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் கடந்த மூன்று தினங்களாக ஒன்று முதல் ஐம்பத்தி ஒன்று வார்டுகள் வரை நடைபெற்ற திமுக ஆய்வுக் கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ., அவர்கள் கலந்துகொண்டு வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றியும் கழக ஆக்கப்பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றி மக்களின் கோரிக்கைகளையும் மனுக்களையும் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் மாணவர் அணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஏ.செங்குட்டுவன், எஸ்.கே.பி.சீனிவாசன், நகரக் கழக நிர்வாகிகள், சந்துரு. ஜெகன்நாதன் வெங்கடேசன். கன்னியம்மாள்,மாவட்ட பிரதிநிதிகள் கந்தசாமி, சிகாமணி, மாமல்லன், எம்.எஸ்.சுகுமார், குமரேசன், ஜி.சுகுமாரன், விஸ்வநாதன், இளைஞரணியை சேர்ந்த சோபன்குமார் யுவராஜ், அர்ஜீன், எஸ்.கே.பி.கார்த்திக், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, மாவட்ட பிரதிநிகள், வட்ட செயலாளர்கள் கழக அணிகளின் மாவட்ட, நகர, வட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் வட்ட கழக நிர்வாகிகள் உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டு ஆய்வு கூட்டத்தை சிறப்பித்து வருகின்றனர்.
இதனையடுத்து, இன்று புதன்கிழமை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது வட்டத்தில் விஸ்வதாஸ் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தை திமுக நிர்வாகி அம்மன் பில்டர்ஸ் தாஸ் மற்றும் தில்லிபாபு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் வட்ட கழக செயலாளர் சந்திரசேகர்,வட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாத்திகம் நாகராஜன், மணி, ரமேஷ், இளங்கோ, வீரமணி, ஸ்ரீதர், நாகேந்திரன், சுரேஷ், கருணாகரன், தனசேகர் முன்னிலை வகித்தனர்.மற்றும் வேலாயுதம், மதியழகன், நாகராஜன், சுரேஷ், சந்தீப்குமார், முனுசாமி, கோபி, வேதமூர்த்தி மற்றும் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments