வேலூரில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (டிஎன்எஸ்டிஎம்ஏ) படி, நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக இருந்தது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் 25 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அதிர்வானது வேலூருக்கு மேற்கு-தென்மேற்கே 59.4 கிமீ தொலைவில் மையம் கொண்டு திருப்பத்தூர் வரை நீண்டது. திங்கள்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் 25 கி.மீ ஆழத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அப்பகுதியில் உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை.
No comments
Thank you for your comments