டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோவை, நவ.18-
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கூட்டமைப்பின் தலைவரும் சிஐடியு சங்க மாவட்ட தலைவருமான எஸ். மூர்த்தி தலைமையில் டாஸ்மாக் ஊழியரை தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இடிகரை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரியும் சிதம்பரம் என்பவரின் மீது ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சிதம்பரத்தின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்றும் மேலும் அரசு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் கடைகளை இடமாற்றம் செய்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வங்கி ஊழியர்களே தொகையினை பெற்றுச் செல்ல வழி வழி வகை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சங்கம் சார்பில் ராமகிருஷ்ணன், செந்தில் பிரபு, எல்பி எஃப் ராக்கி முத்து, ஏடிபி நெடுமாறன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments
Thank you for your comments