Breaking News

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல்ராஜா மீது காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார்

 காஞ்சிபுரம் 

ஜெய்பீம் படத்தின் வன்னிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும் மற்றும் சாதி கலவரம் தூண்டும் வகையில் படம் தயாரித்த சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தமாகாவினர் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு. 


அண்மையில்  ஓடிடி  இணையதளத்தில் ஜெய்பீம் வெளியானது.  இயக்குனர் ஞானவேல்ராஜா, நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும் மற்றும் மறைந்த வன்னியர் சங்கத்தின் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் பெயரை வைத்து சாதி கலவரம் தூண்டும் வகையில்  திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ராஜா மீது வழக்கு பதிவு செய்யக் கோரி  சிவகாஞ்சி காவல் நிலையத்தில்  காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, மாநில இளைஞரணி செயலாளர் மகேஷ் குமார், காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள், மாநில துணைத் தலைவர் செந்தில் முதலியார், நகர செயலாளர்கள் தயாளன், கணேஷ் உட்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments