Breaking News

பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 2021-21 ம் ஆண்டு இரபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம், நெல்-III (நவரை), பச்சைப்பயறு, உளுந்து, எள், கரும்பு, நிலக்கடலை, பருத்தி, வாழை, சிறிய வெங்காயம், மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதன் படி, பிரிமியத்தொகையாக 

சோளப்  பயிருக்கு ஏக்கருக்கு ரூ.123.75-ஐ 30-11-2021க்குள் செலுத்த வேண்டும். 

மக்காச்சோளப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.410.89-ஐ 30-11-2021க்குள் செலுத்த வேண்டும். 

நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.296.40 - ஐ 31-12-2021க்குள் செலுத்த வேண்டும். 

பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.544.58 ஐ 15-03-2022க்குள் செலுத்த வேண்டும். 

பச்சைபயறு மற்றும் உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.196.59- ஐ 15-11-2021க்குள் செலுத்த வேண்டும். 

நெல்-III (நவரை) பயிருக்கு ரூ. 512.77 ஐ 31-01-2022க்குள் செலுத்த வேண்டும். 

எள் பயிருக்கு ரூ.122.27ஐ 15-02-2022 க்குள் செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு ரூ.2840.50ஐ 31-08-2022க்குள் செலுத்த வேண்டும்.

மேலும் தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1716.66ஐ 15-02-2022க்குள் செலுத்த வேண்டும். 

தக்காளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.941.08ஐ 15-02-2022க்குள் செலுத்த வேண்டும். 

சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1896.96ஐ  31-01-2022க்குள் செலுத்த வேண்டும். 

மரவள்ளி பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1468.42ஐ 28-02-2022க்குள் செலுத்த வேண்டும். 

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு கட்ன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதி மொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் அல்லது விலக்களிக்கக் கோரலாம்.

மேலும் பயிர் காப்பீடு திட்டத்திலிருந்து விலக்கு கோரி கடிதம் அளித்த நிலையில் அவர் எந்த பயிருக்கு கடன் பெற்றாரோ அப்பயிருக்கான காப்பீடு காலம் முடிவதற்கு 7 தினங்களுக்கு முன்னர் ஏற்கனவே கடன் பெற்ற சங்கம் அல்லது வங்கியில் உரிய பிரிமீயத் தொகை மற்றும் பயிர் காப்பீடு செய்வதற்குரிய ஆவணங்களை அளித்து கடன் பெற்ற பயிருக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.  

கடன் பெறாத விவசாயிகள், பொதுச்சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் வங்கி கணக்கு நடைமுறையில் உள்ள கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC Code எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments