அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் திறப்பு
காஞ்சிபுரம் :
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் என ரூபாய் 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், திருப்புலிவனம் அரசு மேல்நிலைப்பள்ளி 1921 தொடக்கப் பள்ளியாக துவங்கப்பட்டு படிப்படியாக மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் வகையில் தற்போது சுமார் 700 மாணவ மாணவிகள் பயிலும் நிலையில் போதிய இடவசதி மற்றும் கழிவறைகளை கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடப்பட்டது
அதன் அடிப்படையில் புதியதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆண் பெண் கழிவறைகள் உள்ளிட்ட ரூபாய் 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வழியாக திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு வகுப்பறைகளை திறந்து வைத்தனர். புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்ட வகுப்பறைகள் ஆய்வகங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன் , குமார், ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments