Breaking News

இளைஞரை மர்ம நபர் ஓட ஓட விரட்டி படுகொலை...!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம்  ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நாட்டரசன்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர்  தனது வேலையை முடித்து விட்டு வீடு திரும்புவதற்காக  ஒரகடத்தை அடுத்த பனப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் அவரை சூழ்ந்து  ஓட ஓட விரட்டி  கொலை செய்தனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து ஒரகடம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை  கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பியோடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments