மழைக்கால பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி கிளிதான் பட்டரை பகுதியில் மழைக்கால பேரிடரால் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது.
இதனால், அப்பகுதில் உள்ள அனைவரையும் பத்திரமாக கிளிதான் பட்டரை வி.சி. மஹால் திருமண மண்டபத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்க வைத்து காலை உணவு அளித்தனர்.
பகுதி செயலாளர் வன்னியராஜா, காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி துணை ஆணையர் செந்தில்குமார், ஐந்தாவது வட்ட திமுக விநாயகம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments