Breaking News

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைவு

திருப்பூர்:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துகொண்டனர்.

பா.ஜ.கவின் தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை இருந்துவருகிறார். அவர், தமிழ்நாட்டில் பா.ஜ.கவை முக்கிய சக்தியாக வளர்க்க முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். 

இந்தநிலையில், திருப்பூரில் நடைபெறும் பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கவுள்ளார். அதற்காக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார் ஜே.பி.நட்டா.


கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜே.பி.நட்டாவிற்கு பா.ஜ.க தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.


இந்தநிலையில், திருப்பூரில் வைத்து பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் தங்களை பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டனர். 

அ.தி.மு.கவின் சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் மாவட்ட செயலாளர் சோலன் சீ.தா.பழனிச்சாமி, சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை நிர்வாகிகள், தமிழ்நாடு இளைஞர் கட்சி நிறுவனர் பொதுச்செயலாளர் டி.ராஜசேகர்,  சென்னை புறநகர் .மாவட்ட அ.தி.மு.க ஐடி விங் பிரிவு தலைவர் பிரவீன்குமார், பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.ஆர்.துரைப்பாண்டி, அ.ம.மு.க மாநில அமைப்பு செயலாளர் பாலமுருகன் ஆகியோர் இன்று தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டனர்.


ஒபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் மாணிக்கம்

மாணிக்கம் அதிமுக எம்.எல்.ஏ வாக 2016ம் ஆண்டு முதல் 2021 வரை எம்.எல்.ஏ வாக இருந்தார். ஒ.பி.எஸ்சின் தீவிர ஆதரவாளராக மாணிக்கம் இருந்தார்.

அதிமுகவின் அதிகாரமிக்க வழிகாட்டுதல் குழுவின் 11 உறுப்பினர்களில்  உறுப்பினராக உள்ளார்.

அதிமுகவின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

அதிமுகவில் இருந்து ஒ.பி.எஸ் பிரிந்த பொழுது முதல் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் ஆதரவு தெரிவித்தார்.

மாணிக்கம் 2021 சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.




No comments

Thank you for your comments