Breaking News

பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை குறைக்கக்கோரி பாஜக தொடர் போராட்டம்

சென்னை:

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக்கோரி டிசம்பர் 3ம் தேதி வரை பாஜக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைத்தது போல் தமிழகத்தில் திமுக அரசு VATவரியை குறைக்க வேண்டும் என கோரி இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் இன்று (22-11-2021)  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை உரை நிகழ்த்தினார்.

தொடர் போராட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கக் கோரியும்  நவம்பர் 22 ஆம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதிவரை மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். 

மேலும் எந்தெந்த அணியின் சார்பில், எந்த வகை போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், போராட்டத்தின் பொறுப்பாளர்கள் அடங்கிய பட்டியலின் விபரங்களையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். 

முன்னதாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் குறித்து அறிவித்தார். 

அந்த அறிவிப்புக்கு  நிதி அமைச்சர் நையாண்டியாக ரீடிவிட் பதிவிட்டிருந்தார். அதில் கூறியதாவது,  

என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா

ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே?

அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தன

அப்போது, ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொந்தக் கட்சியின் தேசியத் தலைமையையும், கூட்டாளிகளையும் கண்டிக்குறாரோ

இவ்வாறு பதிவிட்டு போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்...


காலச்சக்கரம் நாளிதழின் (K24 Tamil News) அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ktamilnews


No comments

Thank you for your comments