Breaking News

கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்ணை கட்டி நூதன முறையில் போராட்டம்

விருத்தாசலம்:

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  கண்ணை வெள்ளை துணியால் கட்டி நூதன முறையில் ஏறியை தேடும் போராட்டம்  நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் கிராமம் பெரிய ஏரி 100 ஏக்கர் 34 சென்று தனி நபர் கிராம நிர்வாக அலுவலர் ஆதரவுடன் ஆக்கிரமிப்பு செய்து நிலமாக மாற்றியுள்ளனர்.

அந்த பெரிய ஏரியின் பாசனத்தை தண்ணீர் நம்பி சுமார் 60 ஏக்கர் விவசாயிகள் விளைநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பொதுவாக ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் பயன்படுத்தி பாசன வாய்க்காலை நடுவில் தனிநபர் மறித்து தண்ணீர் போகாமல் தடுத்து வருகிறார். 

இதற்கு ஆதரவாக இருக்கும் வேப்பூர் வட்டாட்சியரை கண்டித்து ஏரியை பாசன வாய்க்காலை மீட்டு கண்டுபிடித்து தரக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்ணை மூடிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி வேப்பூர் வட்டம் சார்பில் வட்டத் தலைவர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், கடலூர் மாவட்ட பொருளாளர் இளங்கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் ராம்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்து கலைந்து சென்றனர்

இதில் வட்ட செயலாளர் செந்தில்குமார், ஐயப்பன், வட்ட பொருளாளர் தாண்டவராயன், தங்கவேல், சீனிவாசன், குப்புசாமி, ரெங்கநாதன், சேகர், சுப்பிரமணியன், மாரிமுத்து, வீராசாமி, கல்யாணசுந்தரம், சரஸ்வதி, பழனியம்மாள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments