அத்வானியின் வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
புதுடெல்லி, நவ.8-
அத்வானியின் வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள், அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
முன்னாள் துணை பிரதமரும், பாஜகவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவருமான எல்.கே. அத்வானி இன்று தனது 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் அத்வானியின் வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அத்வானியுடன் அமர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடினர்.
Called on Advani Ji and wished him on his birthday. pic.twitter.com/LBKY9tdyOx
— Narendra Modi (@narendramodi) November 8, 2021
The Vice President, Shri. M Venkaiah Naidu conveyed his warm birthday wishes to former Deputy Prime Minister, Shri Lal Krishna Advani Ji by visiting him at his residence today. pic.twitter.com/9jGEAOaYbH
— Vice President of India (@VPSecretariat) November 8, 2021
आदरणीय श्री लाल कृष्ण आडवाणी जी के जन्मदिन पर उनके आवास पर जाकर उन्हें शुभकामनाएं दी। pic.twitter.com/gtnQi1ugcX
— Amit Shah (@AmitShah) November 8, 2021



No comments
Thank you for your comments