Breaking News

பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பு திட்டம்... விண்ணப்பங்கள் வரவேற்பு...

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின்  மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2021-2022 - ம் ஆண்டிற்கு பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பு செய்திடும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களிடமிருந்து கீழ்காணும் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

1.பல்நோக்கு பண்ணைகுட்டைகளில் கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை ஊக்குவித்தல் திட்டம் : இத்திட்டத்தினை செயல்படுத்திட ஏற்கனவே பயனாளிகளால் அமைக்கப்ட்ட 1000 சமீ பரப்பில் உள்ள பண்ணைகுட்டைகளை புனரமைத்திடவும் மற்றும்  கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை மேற்கொள்ள ஆகும்  மொத்த உள்ளீட்டு செலவினத்தொகை ரூ.62,500 –ல் 40 % மானியமாக ரூ.25,000/ வழங்கப்பட உள்ளது.



2.பண்ணைகுட்டைகளில் நீர் சேமிப்பு திறனை மேம்படுத்திட பாலித்தீன் உறைகளிட்டு மீன் வளர்த்தல் திட்டம்: பண்ணைகுட்டைகள் அமைத்து மீன்வளர்ப்பில் ஈடுப்பட்டு வரும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு  1000 சமீ பரப்பில் உள்ள பண்ணைகுட்டையில் பாலித்தீன் உறைகளிட்டு மீன் வளர்ப்பு செய்திட ஆகும் மொத்த தொகை, ரூ.1,87,500/-ல் 40% மானியமாக ரூ.75,000/- வழங்கப்பட உள்ளது.

3.  விரால் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்குதல்  திட்டம் :

இத்திட்டத்தினை செயல்படுத்திட இம்மாவட்டத்தில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள நபர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் விரால் மீன்வளர்ப்பு பண்ணைகளுக்கு ஆகும் மொத்த இடுபொருட்கள் செலவினத்தொகை ரூ.75,000/-ல் 40% மானியமாக ரூ.30,000/- வழங்கப்பட உள்ளது. 

இம்மாவட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் உரிய விண்ணப்பபடிவத்துடன் உரிய ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, நிலத்தின் பட்டா, சிட்டா மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் உறுப்பினருக்கான இரசீது ஆகியவற்றுடன் வருகின்ற 13.12.2021-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும்  தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர்  அலுவலகம், 1/165 ஏ, இராhமசாமிகவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, தருமபுரி - 636705   (அலுவலக தொலைபேசி எண்: 04342-232311) என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.    

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments