Breaking News

தண்ணீர் பிடிக்க வரும் தாய்மார்கள் தள்ளாட்டம்!

வேலூர், நவ.15-

வேலூர் 2வது மண்டலம் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவில் குடிநீர் தொட்டி அருகில் சேரும் சகதியுமாக இருப்பதால் தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதியுறுகின்றனர். தண்ணீர் பிடிக்க  வருபவர்கள் தள்ளாடி கீழே விழுந்து செல்கின்றனர். குடிமகன்கள்தான் தள்ளாடுவார்கள் என்றால் குடிநீர் பிடிக்க வரும் தாய்மார்களும் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் மிகையாகது... இதனை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதிவாழ்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்... 


No comments

Thank you for your comments