பருவமழை பாதிப்பு சீரமைப்பு பணிகள் ஆலோசனை கூட்டம்
வேலூர், நவ.9-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
![]() |
லில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ள காரணத்தால் வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
நீர்தங்கும் பகுதிகள் குறித்தவிவரம், தேங்கியநீர் அகற்றப்பட்ட விவரம், ஏரி, குளங்களில் நீர் நிரம்பியுள்ள விவரம், ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 8.11.2021 அன்று மாலை 6.00 மணியளவில் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இந்த காணொளி காட்சி ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்டஅலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேலூர் மாநகராட்சி ஆணையாளர், நேர்முக உதவியாளர் (பொது), கோட்டப் பொறியாளர் நெடுங்சாலைத் துறை, செயற்பொறியாளர், மேல்பாலாறுவடிநிலக் கோட்டம், கண்காணிப்பு பொறியாளர், த.மி.வாரியம், வேலூர், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்து உதவி ஆணையாளர்கள் வேலூர் மாநகராட்சி மற்றும் சார்புத் துறையைச் சேர்ந்தஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்ய உள்ளதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மேற்கொள்ளப்படவேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினார்.

No comments
Thank you for your comments