நூல்கள் சிந்தனை! - கொரோனா
வேலூர், நவ.14-
நூல் பெயர்: கொரோனா
நூல் எழுத்தாளர் : க.த.அ.கலைவாணன்
பதிப்பாளர் : கலை பதிப்பகம், திண்டுக்கல்
பக்கங்கள்: 188,
தொகுப்பு : 31 சிறு கதைகள்
விலை : ரூ.120
தொ.எண் : 90922 84251.
நூலின் முன்னுரையில் என் தந்தை க.கிருஷ்ணமூர்த்தி, தாய்மொழி தெலுங்கு என்றும் தமிழின் மேல் ஆர்வத்தால் க.தமிழரசு என்று பொதுவுடமை சிந்தனைகளால் அரசியல் வட்டாரத்தில் கே.டி.அரசு என கருத்து வேற்றுமையால் காங்கிரஸில் சேர்ந்து இறுதி வரை பணியாற்றினார். ஆசிரியர் பிறந்த வேளையில் ஆங்கிலேயே எதிர்ப்பு காரணமாக தந்தைக்கு மதுரை சிறைவாசம். இறை நம்பிக்கை கொண்டவர் ஆயினும் மத சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர். நாடு விடுதலை அடைந்த பின் காங்கிரஸ் ஆட்சியில் 5 ஏக்கர் நிலம் இலவசமாக அளித்ததை அது தியாகம் என்று மறுத்து பின்னாளில் பொருளாதார நெருக்கடியால் பென்ஷன் பெற்றுக்கொள்ள சம்மதித்து முதல் பட்டுவாடா தேடி வந்தபோது அதற்கு முன்நாளில் இயற்கை எய்தினார்.
தன் தாய் நவமணி 4 பெண்களும் 3 ஆண்களும் பிறந்தவர்களில் மூத்த மகள். தலித் இனத்தை சேர்ந்தவர். இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். தன் தந்தை திரு கக்கனிடமும் மற்றவர்களிடமும் நெருக்கமாக இருந்தார் என்று இந்த நாளில் மிகத் துணிச்சலாக எழுதுகிறார். தன்னைப்பற்றி.. ஆட்சி மொழித் துறை அதிகாரியான நான் தமிழ் ஹிந்தி இடையே நட்பு பாலம் அமைக்க ஹிந்தி பேரவையை துவக்கினேன் என்று சொல்கிறார். அதற்காக வாழ்த்துக்கள்.
இவரது சிறுகதைகள்... உண்மை சம்பவங்களை தான் கண்ட.. கேட்டு உணர்ந்தவைகளை மிக எளிமையான வடிவில் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். தொலைகாட்சியில் மழை பெய்ய வாய்ப்பு என்றாலும் மழை மேகங்கள் தாமதமாக வரும். பாலாறு மணல் கொள்ளையால் பாதிப்படைந்துள்ளது என்றும் திரை&சிறை, தாய், வலிப்பு, நாய்வால், மதராஸி, மனவடு, முட்டுச்சந்து போன்ற அனைத்து கதைகளிலும் யதார்த்தத்தை காணமுடிகிறது. இவரது கதைகளில் கோபம், அன்பு, பாலியல் வன்கொடுமை, ஏமாற்றம், மன தடுமாற்றம் என்று பல முகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளது மிகச்சிறப்பு.
நான் என் கணவரிடம் அன்பு கலந்த சொற்களை எதிர்பார்த்தேன்... ஏமாற்றமே கிட்டியது. என் கணவர்.. என் நண்பர்.. வழிகாட்டி கை தூக்கி விடுவார் என நினைத்த எனக்கு அவரது மௌனம் ஈட்டியாக குத்தியது. கணவன் கணவன் தான்... நண்பன் நண்பன் தான்... மனைவியை நுகர்வதற்கு மட்டுமே பயன்படுத்த நினைக்கும் சமூகம் என்ற நாய்வால் ஒருநாளும் நிமிராது. ஒரு முட்டுச் சந்தில் நுழைந்து விட்டு வெளியேற வழி தேடுகிறேனா?...மொத்தத்தில் ஒரு சமூக பார்வையாளராக ஒவ்வொரு கதைகளில் நுழைந்து முதல் தொகுப்பில் இவ்வளவு சிறப்பு அம்சங்கள் காணமுடிகிறது. சமூகத்தை தன் தந்தையின் வழியில் துணிச்சலாக சுட்டிக்காட்டிய விதம் சிறப்பு.
✒ நூல் சிந்தனை கருத்தாளர்: சிந்து சீனு
வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
காலச்சக்கரம் நாளிதழ்
#54, 3வது குறுக்குத் தெரு,
டிகேஎம் கல்லூரி பின்புறம்,
கணபதி நகர், வேலூர் - 632002
No comments
Thank you for your comments