பள்ளி வளாகத்தை மழைநீர் தேங்காத அளவுக்கு உயர்த்தப்படும்... பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்
திருப்பூர் :
திருப்பூர் பெரும் வெல்ல பாதிப்பினால் திருப்பூர் வடக்கு தெற்கு பகுதியில் ஒரு சில இடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் போயம்பாளையம் இரண்டாம் மண்டல அலுவலகம் அருகில் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது இந்த பள்ளி வளாகத்தில் மழை காலங்களில் பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் சென்று குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் மாணவச் செல்வங்கள் மன வேதனையாலும் நோய் தொற்று பரவும் அபாய கட்டத்தில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
இந்த பள்ளியை குறித்து ஆசிரியப் பெருமக்கள் மழைக்காலங்களில் பள்ளி வளாகங்கள் சேறும் சகதியுமாக உள்ளதாகவும் விஷப் பூச்சிகள் அதிகமாக காணப்படுவதாகவும் குற்றம்சாட்டினர் .
மேற்கொண்டு ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பலமுறை எடுத்துரைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு இந்த செய்தியை பல்வேறு பத்திரிகைகளும் செய்தியாக வந்தது.
இதை அறிந்த திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்துவிட்டு போயம்பாளையம் நடுநிலைப் பள்ளிக்கு மேற்பார்வை இடுவதற்காக வரும் நேரத்தில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி சம்மந்தப்பட்ட இரண்டாம் மண்டல உதவி ஆணையாளர் கண்ணன் அவர்களை காணவில்லை. மேற்கொண்டு பள்ளிக் குழந்தைகள் நலன் கருதி ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து இந்த பள்ளி வளாகத்தை மழைநீர் தேங்காத அளவுக்கு உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார் .
No comments
Thank you for your comments