கால்வாய்களை தூர் வாராததே வெள்ள பெருக்கு... கிராம மக்கள் குற்றசாட்டு.
தருமபுரி :
அரூர் அருகே தொடர்ந்து பெய்த கன மழையால் தரைப்பாலம் மூழுகியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துடன் சென்று வருகின்றனர் - கால்வாய்களை தூர் வாராததே இதற்கு காரணம் என கிராம மக்கள் குற்றசாட்டு.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையால் ஏரி குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. அரூர் அடுத்த செல்லம்பட்டி ஏரிக்கு வரும் கால்வாயில் பொதுப்பணித்துறையினர் முறையாக தூர் வராததால் நீர்வரத்து அதிகரித்தது.
அரூர் முதல் திருவண்ணாமலை செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் சிரமத்துடன் செல்கின்றனர்.
தரைப்பாலத்தில் இருபுறத்திலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவ்வழியாக சிரமமும் இன்றி செல்ல கிராம மக்கள் உதவியுடன் சாலையை பாதுகாப்பாக கடக்கின்றனர்.
மேலும் பொதுப்பணித் துறையினர் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து இருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டு இருக்காது எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக விவசாய நிலங்களிலும் தண்ணீர் சூழ்ந்து நெற் பயிர், பருத்தி, கரும்பு, கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சேதமாகின.
No comments
Thank you for your comments