டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டரை பெரும்புதூரில் அமைந்துள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவின் தலைமை விருந்தினராக சட்டம் நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத் துறை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி அரசு செயலர் பா. கார்த்திகேயன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன் ஒன்றிய பெரும்குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால் ஒன்றிய குழு உறுப்பினர் சுபாஷினி பாஸ்கர் பட்டரை பெருமந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா முத்து மற்றும் சட்ட முதுகலைப் பட்டம் பெறும் 100 மாணவ| மாணவியர்களும் இளங்கலை பட்டம் பெறும் 400 மாணவ மாணவிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர் இவ்விழாவில் இறுதியில் நன்றியுரையை உதவி பேராசிரியர் பாலாஜி அவர்கள் நன்றி கூறி முடித்தனர்.
No comments
Thank you for your comments