Breaking News

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்- பிரதமர், சோனியா காந்தி தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி, நவ.14-

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி நவம்பர் 14ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 132வது பிறந்தநாள் இன்று நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

அங்கு நேரில் சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, நேருவின் பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளம் வாயிலாக மரியாதை செலுத்தி உள்ளார். 


இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments