Breaking News

புதியதாக உதயமாகியுள்ள உதயா நகர் பெயர் பலகையை திறந்து வைத்தார் ஒன்றிய செயலாளர் சு.சுரேந்திரன்

கோவை:

கோவை மாவட்டம் காரமடை மேற்கு ஒன்றியம் தோலம்பாளையத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளையொட்டி ஊராட்சியில்  புதியதாக உதயமாகியுள்ள  உதயா நகர் பெயர் பலகையை காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர்  சு.சுரேந்திரன் திறந்து வைத்தார். 

ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் செந்தில் மற்றும்  காரமடை  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தாயனூர் பிரதீப் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ,மாணவ மாணவியருக்கு  நோட்டு புத்தகங்கள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்  சரவணன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ஸ்டாலின், சந்திரன், கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள்    மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments