கோவில்களில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை ஆண்டவன் முன் அனைவரும் சமம்... உயர்நீதிமன்றம்
சென்னை, நவ.2-
ஸ்ரீரங்கம் கோவில் 2-வது பிரகாரத்தில் வலம் வர ஏற்பாடு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் 2-வது பிரகாரத்தில் வலம் வர ஏற்பாடு செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திங்கட்கிழமை மகாதேவன், ஆதிகேசவன் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஸ்ரீரங்கம் கோவில் 2-வது பிரகாரத்தில் வலம் வர ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி 500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் ‘‘கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. ஆண்டவன் முன் அனைவரும் சமம். மனுதாரர் குற்றச்சாட்டை மனுவாக அளிக்க வேண்டும்’’ என்றனர். மேலும், அறநிலைத்துறை இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துனர். அத்துடன் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

No comments
Thank you for your comments