சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை, நவ.2-
சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்டார்.
சென்னையில் 40 லட்சத்து 54 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்,
வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வாக்குச்சாவடிகளிலும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது, சென்னையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 54 ஆயிரத்து 30, இதில் 19 லட்சத்து 92 ஆயிரத்து 198 பேர் ஆண்கள்., 20 லட்சத்து 60 ஆயிரத்து 473 பேர் பெண்கள், 1,083 பேர் மூன்றாம் பாலினத்தவர்
சென்னையில் அதிகப் பட்சமாக வேளச்சேரியில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 502 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 679 வாக்காளர்களும் உள்ளனர்,
சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நேற்று தொடங்கி நவம்பர் 30 ம்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்படடுள்ளது, வரும் 13, 14 மற்றும் 27 மற்றும் 28 தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது,
மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர்கள் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி 6 கோடியே இருபத்தி எட்டு லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர்,
பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பேர் மூன்றாம் பாலினத்தவர் இரண்டாயிரத்து 342 பேர்
No comments
Thank you for your comments