விசாகப்பட்டினத்தில் திடீர் நிலநடுக்கம்
விசாகப்பட்டினம்
ஆந்திராவின் முக்கிய நகரமான விசாகப்பட்டினத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள நகரும் விசாகப்பட்டினம். இங்கு துறைமுகம், உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை, மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்டவை உள்ளன. ஆந்திராவின் முக்கிய நகரமான விசாகப்பட்டினத்தில் இன்று காலை 7.13 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அக்கய்யபாலம், முரளி நகர், கடற்கரை சாலை, கஞ்சன் பாலம், மதுரா நகர், தாடி செட்ல பாலம் உள்ள பகுதிகளில் 10 வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீட்டிலிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். சில வீட்டு சுவர்களில் விரிசல் விழுந்தது. 1.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments