Breaking News

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் 4 நாள் ஊரடங்கு அறிவிப்பு

மும்பை, நவ.14-

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் 4 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் வகுப்புவாத வன்முறையை தூண்டும் வகையில் யாரும் பேச வேண்டாம் மக்கள் அமைதியை பராமரிக்க உதவ வேண்டும் என்று மாநில காவல் துறைத் தலைவர் சஞ்சய் பாண்டே பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன என்று மகாராஷ்டிர மாநிலத்தில் செய்திகள் வரவில்லை திரிபுரா மாநிலத்தில் உள்ள மசூதி ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்ட தாகவும் செய்தி பரவியது. இதனை கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று  சுமார் 8,000 பேருக்கு அதிகமான கூட்டம் அமராவதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கூறியது அவர்கள் திரிபுரா மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படக் கூடாது அதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மனு ஒன்றை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தந்து மத்திய அரசுக்கு அனுப்பும் படி கேட்டுக் கொண்டனர். மனு தந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் போது சில பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது தனியார் நிறுவனங்கள் சில கல்வீச்சில் நாசம் அடைந்தது. சனிக்கிழமை அன்று அமராவதி நகரில் முழு  கதவடைப்பைக் கடைப்பிடிக்கும்படி பாரதிய ஜனதா கட்சி வேண்டுகோள் விடுத்தது.

தனது அக்கட்சியினர் சனிக்கிழமையன்று பந்த் நடத்தினர் ராஜ்கமல் பஜார் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அப்பொழுது அங்கு உள்ள கடைகள் மீது கற்கள் வீசப்பட்டன. கற்களை வீசிய ஊர்வலத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 20 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அமராவதியில் நடக்கும் சம்பவங்கள் வேண்டும் என்று திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன என்று தேசியவாத காங்கிரஸ் சிவசேனை காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அமராவதி மாவட்டத்தில் அமைதி நிலவ கூடாது என்று சில தீய சக்திகள் திட்டமிட்டு செயல்படுகின்றன என்று கோமதி குற்றம் சாட்டியுள்ளார். திரிபுராவில் எந்த சம்பவமும் நடக்கவில்லை திரிபுரா மாநில அரசு போலீசார் விளக்கம் தந்திருக்கிறார்கள் அங்கு கொளுத்தப்பட்ட தாக கூறப்படும் மசூதியின் படத்தை வெளியிட்டு அரசு விளக்கம் தந்து உள்ளது ஆனாலும் திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவங்கள் நடப்பதாக திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுகின்றன என்று மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவி குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு அமராவதி நகரில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் அறிவித்துள்ளார்.

நான்கு நாட்களும் வதந்திகள் பரப்பப்பட்டு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அமராவதியில் அமைதியை நிலைநாட்ட நாக்பூர் நகரிலிருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் அமராவதி நகரில் வந்துள்ளனர் இதுதவிர மகாராஷ்டிர மாநில ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த இரண்டு கம்பெனிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அமராவதி நகரில் ரோந்து சுற்றி வருகிறார்கள். அமராவதியில் நடந்த சம்பவங்களைக் கண்டித்து மும்பை நகரின் சில பகுதிகளில் பந்து நடந்ததாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர மாநில ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி அமல் பிரிவு இயக்குனரகத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டது சிபியை பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  ஆனால் இவைகளை எல்லாம் தாண்டி கூட்டணி அரசு அங்கு அமைதியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதனால் இப்பொழுது மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்ற வதந்தியை கிளம்புவதற்காக வன்முறைச் சம்பவங்களை திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சி அரங்கேற்றி வருகிறது என்று சிவசேனை எம்பி சஞ்சய் ரவுத் குற்றம்  சாட்டியுள்ளார்.

No comments

Thank you for your comments